கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்
X

கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை  

சங்ககிரி அருகே ஏணியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கத்தேரி ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் வீட்டின் முன்பு உள்ள ஏணியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சங்ககிரி பழைய பேருந்து நிலையம் மண்டபத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (50) கூலித் தொழிலாளி இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 6 மாதங்களாக கத்தேரி ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அதிகாலை வீட்டின் முன்பு உள்ள ஏணியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தேவூர் காவல் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில், தேவூர் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story