கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
சங்கரன்கோவில் அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கொக்குகுளத்தைச் சேர்ந்தவர் மாரிசாமி மகன் முருகராஜ் (40). இவர் கூலி தொழிலாளயான முருகராஜ் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் அய்யாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அவர் எதற்காக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதை பற்றி அய்யாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story