கார் மோதி கூலி தொழிலாளி பலி
கூலி தொழிலாளி பலி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மேல தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (47) விவாசய கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மழையூர் கிராமத்தில் மளிகை பொருட்களை வாங்கிகொண்டு அங்குள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு சேத்துப்பட்டு சாலை நோக்கி நடந்து சென்றாராம். அப்போது பின்னால் சேத்துப்பட்டு நோக்கி வந்த கார் ஒன்று அதிவேகமாக சென்று முருகேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழிலேயே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது சகோதரி சென்னை வில்லி வாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி (62) வடவணக்கம்பாடி போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.
Next Story