மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் தொழிலாளி உயிரிழப்பு

X
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் தொழிலாளி உயிரிழப்பு -டிரைவர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள அழகிய பாண்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (45). இவர் கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகி மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். ஐயப்பன் நேற்று மதியம் பணிகளை முடித்துவிட்டு சக தொழிலாளி அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (32) என்பவரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். துவரங்காடு பகுதியில் சென்ற போது, எதிரே வந்த லாரி ஐயப்பனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரசாந்த் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ஐயப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரசாந்தும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் லாரி ஓட்டி வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த டிரைவர் சீனிவாச ராவ் (30) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
