இருசக்கர வாகன விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு
காவல்துறை விசாரணை
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உட்பட்ட சிந்தல்பாடி - தர்மபுரி ரோட்டில் உள்ள பங்கில் இருசக்கர வாகன விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு மொரப்பூர் காவல் துறையினர் விசாரணை.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளியான இவர், நேற்று சிந்தல்பாடி - தர்மபுரி ரோட்டில் உள்ள பங்கில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு, B.பள்ளிப்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டி ருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில், வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த குமாரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் இன்றுஉயிரிழந்தார். இதுகுறித்து மொரப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story