கூலித் தொழிவாளிக்கு ஆயுள் தண்டனை

கூலித் தொழிவாளிக்கு ஆயுள் தண்டனை

சிவகாசியில் கூலித் தொழிவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.


சிவகாசியில் கூலித் தொழிவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தொழில் போட்டியில் ஒருவர் கொலை.கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது.மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி ( 51 ) இவர் விறகு வியாபாரம் செய்யும் தொழிலாளி,அதே பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடாசலம், ரெண்டு பேரும் ஒரே தொழில் செய்து வருவதால் முன்பகை ஏற்பட்டுள்ளது. இந்த முன்பகைய காரணமாக கடந்த 11/7/2020 அன்று வெங்கடாசலம் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது முனியசாமி அரிவாளால் வெங்கடாசலத்தை வெட்டி கொலை செய்து விடுகிறார்.

இது தொடர்பாக வெங்கடாஜலத்தின் மகள் காளீஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து முனியசாமியை கைது செய்தனர்.மேலும் இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூரில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் வெங்கடாஜலத்தை வெட்டி கொலை செய்த முனியசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் வெங்கடாஜலத்தை வெட்டும் போது தடுக்க வந்த அவரது மகள் காளீஸ்வரையும் அவரது தாயாரையும் வெட்டியதால் முனியசாமிக்கு தலா ஆறு மாதம் கூடுதல் தண்டனை விதித்து உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

Tags

Next Story