வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கூலி தொழிலாளி உயிரிழப்பு -முற்றுகை போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் கூலித் தொழிலாளி உயிரிழந்தாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கல்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி விஜயகுமார் (32 வயது) இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நேற்று வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.பின்னர் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய நிலையில் விஜயகுமாருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு வந்த போது அங்கு அவருக்கு மீண்டும் சிகிச்சை வழங்கப்பட்டது.. இதனை தொடர்ந்து திடீரென மருத்துவமனையிலேயே விஜயகுமார் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உரிய சிகிச்சை அளிக்காததால் விஜயகுமார் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுக்கையிட்டு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் தனது கணவருக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்ததாக கூறி விஜயகுமாரின் மனைவி சுபா வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் விஜயகுமாருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் மீது வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் விஜயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்நிகழ்வு குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story