கூலித் தொழிலாளியின் மகள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

கூலித் தொழிலாளியின் மகள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

மதுரை உசிலம்பட்டி அருகே கூலி தொழிலாளியின் மகளான சுஸ்யா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். 

மதுரை உசிலம்பட்டி அருகே கூலி தொழிலாளியின் மகளான சுஸ்யா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மதுரை உசிலம்பட்டி அருகே கூலி தொழிலாளியின் மகளான ஜெ.சுஸ்யா, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் இந்த தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 91.55% என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 91.39% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளர்.

மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றும், மாணவர்கள் 88.58% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 3 மாணவிகள் 500க்கு 499 மதிபெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே விவசாய கூலி தொழிலாளியின் மகளான ஜெ.சுஸ்யா, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.

அவர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் செண்டம் எடுத்துள்ளார். விவசாய கூலித் தொழிலாளி தந்தை, அங்கன்வாடியில் பணியாற்றும் தாய்க்கு மகளான சுஷ்யா, கஷ்டப்பட்டு படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், அவர் படித்த பள்ளி பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அப்பகுதி மக்கள் மாணவி சுஸ்யாவை பாராட்டி வருகின்றனர். தனது பெற்றோர், ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தின் மூலமே அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்ததாகவும்,குடும்பத்தினரின் ஆசைப்படி மருத்துவர் ஆவதே தனது கனவு என்றும் சுஸ்யா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story