அடிப்படை வசதி குறைபாடு புகார்!

அடிப்படை வசதி குறைபாடு புகார்!

திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் மையத்துக்கு வருபவர்கள் பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் மையத்துக்கு வருபவர்கள் பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் மையத்துக்கு வருபவர்கள் பல நாட்கள் காத்திருக்கும் நிலை- அடிப்படை வசதிகள் குறைபாடு புகார்! திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தை நாடுபவர்கள், பல நாட்கள் காத்திருக்கும் நிலையும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் தரைதளத்தில் ஆதார் சேவை மையம் உள்ளது. இதில் திருத்தம் மற்றும் புதிய ஆதார் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள ஆதார் மையத்தை நாடுபவர்களுக்கு, போதிய சேவைகள் கிடைப்பதில்லை என்றும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஜி.பி.எஸ்.கிருஷ்ணசாமி கூறும்போது, “திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்துக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் பல்வேறு தேவைகளுக்கு வருபவர்களின் நோக்கம் முழுமை பெறாமல், திரும்ப அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

ஒருவரின் பெயரில் உள்ள இன்ஷியல் திருத்தத்துக்கு கூட வாரக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. தொழிலாளர்கள் பலர் தங்களது தொழில் நேரம் போக எஞ்சிய நேரங்களில் வந்து, ஆதார் சேவையை பயன்படுத்த நினைத்தால் நிச்சயம் பயன்படுத்த முடியாத சூழல் தான் உள்ளது. ஏனென்றால் நாள்தோறும் 20 டோக்கன்கள் தான் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் அந்த டோக்கன்களுக்கு உரிய நபர்களுக்கான சேவையும், முழுமை அடையாமல் இருப்பது தான் அதிர்ச்சி அளிக்கிறது. ஒருவருக்கு ரூ. 100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மக்களின் அத்தியாவசிய ஆவணத் தேவைகளில் ஒன்றாக, இன்றைக்கு ஆதார் அட்டையும் இருந்து வருகிறது. இந்நிலையில் அதில் திருத்தங்கள் மற்றும் புதியதாக எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பலரும் நாடி வருகிறார்கள். ஆவண பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை காரணங்காட்டி, குறைந்த இடங்களில் ஆதார் மையங்கள் உள்ளன. ஆனால் அதிலும் உரிய சேவை இல்லாமல் இருப்பது தான் வேதனை ஏற்படுத்துகிறது. வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தாலும், அங்கு மின் விநியோகம் தடைப்பட்டால், அடுத்து மின் இணைப்பு வரும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டி நிலை உள்ளது. ஆனால் வட்டாட்சியர் அலுவலகத்தின் பிற பகுதிகள், மின் தடை நேரத்திலும் பேட்டரியில் மின் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் பொதுமக்கள் அதிகம் நாடும் சேவை மையமாக, இன்றைக்கு ஆதார் மையங்கள் உள்ள நிலையில், அங்கு பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதேபோல் குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் இல்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story