குடிநீர் பற்றாக்குறை - சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் !

சாலை மறியல்
சின்னசேலம் அடுத்த மரவாநத்தம் காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர். குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணகோரி புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 8.30 மணியளவில் மரவாநத்தம் மெயின் ரோடில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், முறையாக குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து காலை 9 மணியளவில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து சின்னசேலம் பி.டி.ஓ., செந்தில்முருகன் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டார்.
