பெண் காவலர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்

பெண் காவலர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்

சான்றிதழ் வழங்கிய ஐஜி 

பெண் காவலர்கள் சேவை மனப்பான்மையுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என தமிழக காவல்துறை ஐ.ஜி.ஆனி விஜயா கூறினார்.

வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை 284 பெண் காவலர்களுக்கான 7 மாதகால பயிற்சி நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது . இதில் பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையினை தமிழக காவல்துறை ஐ.ஜி ஆனி விஜயா ஏற்றுகொண்டார்.

இவ்விழாவில் சிறப்பாக பயிற்சியை முடித்த காவலர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் காவல்துறை ஐ. ஜி ஆனி விஜயா, மற்றும் ஐ.ஜி முத்துசாமி ஆகியோர் பங்கேற்று வழங்கினார்கள்.

பயிற்சி காலத்தில் சட்டம் தொடர்பான பயிற்சியில், அருணா ஸ்ரீயும், கவாத்தில் கனிமொழியும், துப்பாக்கி சுடுதலில் ஜனனியும் முதல் பரிசு வென்றனர். அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக பயிற்சி பெற்ற அருணா ஸ்ரீ என்பவருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய ஐ.ஜி ஆணி விஜயா, பிற்படுத்தப்பட்ட மிக பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் வாழ்வில் மேண்மையுறும் வகையில் அனைத்து மக்களுக்காகவும் சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் . தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்துள்ளனர்.

காவல்துறையில் எல்லா காவல்நிலையங்களிலும் தற்போது 50 சதவிகிதம் பெண் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர் . பெண் காவலர்கள் பெண்கள் குழந்தைகள் பிரச்சணைகளை நல்ல முறையில் கையாண்டு பிரச்சணைகளை தீர்வு காண்கின்றனர்.

எப்போதும் பெண் காவலர்கள் சேவை மனப்பான்மையுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் பேசினார்.

Tags

Next Story