திருவண்ணாமலையில் ஏரி குளங்கள் கண்காணிக்கப்படுகிறது - டி.எஸ்.பி

திருவண்ணாமலையில் ஏரி குளங்கள் கண்காணிக்கப்படுகிறது - டி.எஸ்.பி

புயல் காரணமாக தி.மலை மாவட்டத்தில் ஏரி குளங்களை கண்காணிக்க குழு 

புயல் காரணமாக தி.மலை மாவட்டத்தில் ஏரி குளங்களை கண்காணிக்க குழு அமைத்துள்ளோம்; என ஆரணி டி.எஸ்.பி அலுவலக ஆய்வில் டி.ஐ.ஜி முத்துசாமி பேட்டி.

புயல் காரணமாக தி.மலை மாவட்டத்தில் ஏரி குளங்களை கண்காணிக்க குழு அமைத்துள்ளோம்; என ஆரணி டி.எஸ்.பி அலுவலக ஆய்வில் டி.ஐ.ஜி முத்துசாமி பேட்டி. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உட்கோட்டத்தில் ஆரணி டவுன் தாலுக்கா அனைத்து மகளிர் கண்ணமங்கலம் களம்பூர் சந்தவாசல் உள்ளிட்டவைகளில் உள்ள வழக்கு சம்மந்தமாக கோப்புகளை வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமிக்கு டி.எஸ்.பி ரவிசந்திரன் சல்யூட் அடித்து பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்னர் டி.எஸ்.பி அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார்.

இதனையொடுத்து செய்தியாளர்களிடம் டி.ஐ.ஜி முத்துசாமி பேசியதாவது, வருகின்ற மழைகாலங்களில் புயல் காரணமாக தி.மலை மாவட்டத்தில் உள்ள சுமார் 153 ஏரி குளங்களை தலைமை காவலர் தலைமையில் 4பேர் கொண்ட குழு மூலம் கண்காணித்து வருகின்றோம். உடையும் அபாயம் உள்ள ஏரி குளங்கள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதுகாக்க கயிறுகள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளோம். மேலும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வளைதலங்களில் பரப்புவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கபடும். ஆரணி நகருக்குள் கனரக வாகனங்கள் செல்லாமல் பைபாஸில் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளபடும். இவ்வாறு அவர் பேசினார். இதில் டி.எஸ்.பி ரவிசந்திரன் இன்ஸ்பெக்டர்கள் ராஜங்கம் சுப்பிரமணியன் மகாலட்சுமி உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags

Next Story