நாமக்கல்லில் லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை
மாணவ மாணவிகள் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற நாமக்கல்லில் லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை நாமக்கல் ராமாபுரம் புதூரில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் மற்றும் சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளது. ஹயக்ரீவர் கல்விக்கு அதிபதி, தொழில் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குபவர். அவரை வணங்கினால் கல்வி மற்றும் தொழில் அபிவிருத்தி பெருகும் என்பது ஐதீகம்.
இந்த கோவிலில் இன்று பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி அபிவிருத்திக்காகவும், செய்யும் தொழிலில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கி, தொழில் அபிவிருத்தி அடையவும் ஹயக்ரீவருக்கு அர்ச்சகர் ஜெயராமபட்டர் தலைமையில் லட்சார்ச்சனை நடந்தது. இதையொட்டி சாமிக்கு பேனா , பென்சில் மாலை அணிவிக்கப்பட்டது.
இதேபோல் சக்கரத்தாழ்வார் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை (பிப்ரவரி 13) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு ஹயக்ரீவருக்கு மகா யாகமும், தொடர்ந்து 11 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று பின்னர் தீபாராதனை நடைபெறும். இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஹயக்ரீவர் லட்சார்ச்சனை செய்யப்பட்ட பேனா மற்றும் பென்சில் வழங்கப்படும்.