லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம்
மேட்டூரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
மேட்டூர் அருகே நங்கவள்ளியில் 900 ஆண்டுகள் பழமையான அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சோமேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்து அறநிலை துறைக்கு சொந்தமான இந்த ஆலயத்தில் இன்று காலை 5 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், காலை 9 மணிக்கு யாத்ரா தானம், கும்ப பாராயணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து 10. மணிக்கு ராஜகோபுரம் லட்சுமி நரசிம்மர், சோமேஸ்வரர் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்போது கோவில் கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. டிரோன்கள் மூலம் கோவில் பக்தர்கள் மீது மலர்கள் மற்றும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது ஆலயத்தை சுற்றி உள்ள பக்தர்கள் கோவிந்தா என முழக்கமிட்டனர். இன்று மாலை மஹா அபிேஷகம், திருமுறை முற்றோதுதல், பிரசாதம் வழங்கல், சர்வ தரிசனம், திருக்கல்யாண வைபோகம், ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.