494 மதிப்பெண் பெற்று லால்குடிக்கு பெருமை சேர்த்த மாணவி

494 மதிப்பெண் பெற்று லால்குடிக்கு பெருமை சேர்த்த மாணவி
X

லால்குடி மாணவி சாதனை

லால்குடி அருகே கோமாக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்று லால்குடிக்கும்,கோமாக்குடி கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கோமாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் கீதா தம்பதியினர்.இவருடைய மகள் தரணி.இவர் திருச்சியில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ம் வகுப்பு கல்வி பயின்று வந்தார்.

நடந்து முடிந்த 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில் மாணவி தரணி 494 மதிப்பெண் பெற்றுள்ளார்.494 மதிப்பெண் பெற்று லால்குடிக்கும்,கோமாக்குடி கிராமத்திற்க்கும் பெருமை சேர்த்து மாணவியை சமூக ஆர்வலர் ஆசைத்தம்பி மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று மாணவி மற்றும் மாணவியின் பொற்றோர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story