நான்குவழிச் சாலைத் திட்டத்துக்கு நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு தேவை.

நான்குவழிச் சாலைத் திட்டத்துக்கு நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு தேவை.
X
மத்திய அமைச்சரிடம் மனு அளித்த விஜய் வசந்த் எம்.பி
எம்பி விஜய் வசந்த் மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சா் நிதின்கட்கரியிடம் விஜய் வசந்த் எம்.பி. மனு அளித்தார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைத் திட்டப் பணிக்காக நிலம் வழங்கியவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சா் நிதின்கட்கரியிடம் விஜய் வசந்த் எம்.பி. மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகள் பல கட்ட முயற்சிக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இந்தத் திட்டத்துக்காக நிலம் அளித்தவா்கள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கன்னியாகுமரி தொகுதியில் 10 கிராமங்களுக்கு 2014 ஆம் ஆண்டு இழப்பீடு நிலுவைத் தொகை வழங்க மறுத்து நீதிமன்றத்துக்கு நெடுஞ்சாலைத் துறை சென்றுள்ளது. இதனால், பிரச்னை மக்கள் போராட்டமாக மாறி பணிகள் தடைபட வாய்ப்புள்ளது. எனவே, அந்த நிலுவைத் தொகையை உரியவா்களுக்கு வழங்கவும், கேரள மாநிலம், விழிஞ்சம் துறைமுகப் பணிகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலை மழையால் மிகவும் பழுதடைந்துள்ளதால், அச்சாலையை உடனடியாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

Tags

Next Story