தமிழ் நிலம் செயலி மூலம் நில அளவை விபரம் - ஆட்சியர் தகவல்

தமிழ் நிலம் செயலி மூலம் நில அளவை விபரம் - ஆட்சியர் தகவல்
X

 மாவட்ட ஆட்சியர் கார்மேகம் 

பொதுமக்கள் இணையதளம் மற்றும் தமிழ் நிலம் செயலி மூலம் நில அளவைகள் தொடர்பான விவரங்களை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரி திட்ட துறை மூலம் www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் பட்டா மாறுதல் ‘தமிழ்நிலம்' கைப்பேசி செயலி இணையதளத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை, தமிழ் நிலம் இணைய தளத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கையை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ் நிலம் (ஊரகம்) மற்றும் தமிழ் நிலம் (நகரம்) ஆகியவற்றுக்கு கணினி சேவை உருவாக்கப்பட்டு உள்ளன. எனவே பொதுமக்கள் இணையதளம் மற்றும் தமிழ் நிலம் செயலி மூலம் நில அளவைகள் தொடர்பான விவரங்களை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story