போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி
பைல் படம்
பெருமாம்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார் தன்னுடைய 1.5 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து, மோசடி செய்ததாக மூன்று பேர் மீது புகார் அளித்துள்ளார்.
சேலம் பெருமாம்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 50). இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் எனக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலம் பெருமாம்பட்டியில் உள்ளது. இந்த நிலத்தை 3 பேர் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து அவர்களது பெயருக்கு மாற்றி மோசடி செய்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் அவர் கூறியுள்ளார். அதன்பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story