கந்தர்வகோட்டையில் பொன் ஏர் கட்டும் பூஜை

கந்தர்வகோட்டையில் பொன் ஏர் கட்டும் பூஜை

கந்தர்வகோட்டை பகுதியில் பொன் ஏர் கட்டும் முன் பூமி பூஜை செய்தனர்!


கந்தர்வகோட்டை பகுதியில் பொன் ஏர் கட்டும் முன் பூமி பூஜை செய்தனர்!
கந்தர்வகோட்டை பகுதியில் பொன் ஏர் கட்டும் முன் பூமி பூஜைகளை விவசாயிகள் செய்தனர். கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய முழுவதும் பெரும்பாலன விவசாயிகள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இப்பகுதியில் நெல், வாழை, கரும்பு, எள், சோளம், உளுந்து, துவரை போன்ற தானியங்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். பண்டைகாலம் முதல் சித்திரை மாதத்தில் பொன் ஏர், நல்ஏர் என்று கூறும் விதமாக சித்திரை மாதத்தில் இயற்கை எரு போட்டு, மாடு கட்டி ஏர் ஓட்டுவது வழக்கமா இருந்துள்ளது. தற்சமயம் ஏர் மாடுகள் இல்லாததால் பொன் ஏர் கட்டுவதற்கு முன்பாக சித்திரை வருடபிறப்புக்கு விவசாயிகள் பெரும்பாலானோர் தேங்காய், பழம், இயற்கை தொழு உரம் நெல், கடலை விதை, காப்புநெல், கடலை விதை, காப்பு அரிசி என்றும் சக்கரை கலந்த பச்சரிசி எடுத்து சென்று அவரவர் நிலங்களில் தலைவாழை இலை விரித்து பச்சை அரிசி வைத்து மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து தொழுஉரம் தூவி, விதை விதைந்து இறைவழிபாடு செய்தனர். விவசாயிகள் கூறும் போது பங்குனி பழ மழை பெய்து உள்ளதால் இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக அமையும் என்று நம்புகிறோம் என்று கூறினார்கள்.

Tags

Next Story