கள்ளக்குறிச்சியில் நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நில அளவரைத் தாக்கிய முருகானந்தன் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தேவராஜன், இணைச் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட செயலாளர் இந்திரகுமார், மாநில துணைத் தலைவர் செந்தில்முருகன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், அரசு அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், பட்டுக்கோட்டை அடுத்த பெரியகோட்டை கிராமத்தில் நில அளவரைத் தாக்கிய முருகானந்தன் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story