தாராபுரத்தில் நில அளவீடு செய்யும் பணி: ஊராட்சித் தலைவர் நேரில் ஆய்வு

நிலம் அளவீடு செய்யும் பணி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட சி.அம்மாபட்டி நரிக்குறவர் குடியிருப்பு வீடுகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு சிதிலமடைந்த நிலையில் குடியிருப்பதற்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தாராபுரத்தில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் செய்தித் துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன்,
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரிடம் நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர், இக் காலனி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு தாராபுரம் சி அம்மாபட்டி நரிக்குறவர் காலணியில் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மிகவும் பழுதடைந்து,
இருந்த 31 வீடுகளையும் இடித்து அப்புறப்படுத்திவிட்டு தலா 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீடுகளை விரைவாக ,தரமானதாக கட்டித் தர தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டு இதற்கான தொகை ரூ 1 கோடியே 55 லட்சத்தை ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜூவுக்கு உத்தரவிட்டார்,இதை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன் தாராபுரம் நரிக்குறவர் காலணியை நேரில் வந்து பார்வையிட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வீடு கட்டும் பணிகளை துவங்கும் முன்,
ஏற்கனவே உள்ள பழுதடைந்த வீடுகள் அனைத்தையும் அப்புறப்படுத்திவிட்டு நவீன வசதியுடன் கூடிய வீடுகளை கட்டுவதற்கு ஏற்ப அக்குடியிருப்பு பகுதியில் நில அளவீடு செய்து பணிகளை துவங்க உத்தரவிட்டார், இதையடுத்து தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஆகியோர் முன்னிலையில் பழைய குடியிருப்புகளை அகற்றி அப்பகுதியை தூய்மைப்படுத்தி அளவீடு செய்யும் பணி துவங்கியது,.
கவுண்டச்சிபுதூர் ஊராட்சி தலைவர் செல்வி ரமேஷ் நரிக்குறவர் காலனிக்கு நேரில் வந்து கள ஆய்வு செய்து பாதுகாப்பான முறையில் சிதிலமடைந்த வீடுகளை அப்புறப்படுத்தி, நில அளவீடு செய்து 31 வீடுகளுக்கான இடங்களை அத்து செய்யும் பணியை நேரில் பார்வையிட்டார், நிகழ்ச்சியின் போது வார்டு கவுன்சிலர் நர்மதா ஈஸ்வரன் ஊராட்சி செயலாளர் நாகராஜன் மற்றும் நில வருவாய் ஆய்வாளர்கள் வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
