லாண்டீஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி ஆண்டு விழா

லாண்டீஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி ஆண்டு விழா

ஆண்டுவிழா

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள லாண்டீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3,4,5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான ஆண்டுவிழா நடைபெற்றது.
நத்தத்தில் உள்ள லாண்டீஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள லாண்டீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3,4,5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான ஆண்டுவிழா நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளர் ஹெர் பட்லாண்டீஸ் தலைமை தாங்கினார். தாளாளர்கள் நிக்சன் லாண்டீஸ், எஸ்தர் லாண்டீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் மோசஸ் ரஞ்சித் வரவேற்றார். விழாவில் மாணவ,மாணவிகளின் ஓவியம், நடனம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும் நடந்தது.தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கபட்டது. இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story