போடிமெட்டு மலைச்சாலை 11 வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு.

போடிமெட்டு மலைச்சாலை 11 வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு.

மண் சரிவு

தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் போடி மெட்டு மலைச்சாலையில் கன மழை காரணமாக 11 வது கொண்டை ஊசி வளைவு அருகில் மண் சரிவு, ராட்சச பாறைகளுடன் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் தமிழக முந்தல் சோதனை சாவடியிலும் கேரளா போடி மெட்டு சோதனை சாவடிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூ ரிலிருந்து கேரளா இடுக்கி மாவட்டத்தை இணைக்கும் போடிமெட்டு மலைச்சாலையில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டிருந்தது. கேரளா செல்லும் வாகனங்களும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். சிறு சிறு மண் சரிவுகள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் போடி மெட்டு சாலையில் உள்ள 8 மற்றும் 11 கொண்டை ஊசி வளைவு ராட்சச பாறைகள் சாலையில் ஒரு பகுதியில் விழுந்து அப்புறப்படுத்தப்படாத நிலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர் .

இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பதினோராவது கொட்டை ஊசி வளைவில் ஏற்பட்ட மண் சரிவு மேலும் சரிவடைந்து சாலையை முற்றிலும் மறைத்தது. மண் சரிவுடன் ராட்சச பாறைகள் இருப்பதால் மன்சரிவினை அப்புறப்படுத்த முடியாமல் காவல்துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் தினறி வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்க்ரே போடி மெட்டு மழைச்சாலையில் நேற்று இரவு 10 மணியிலிருந்து வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளார். இதன் காரணமாக போடி மெட்டு முந்தல் சோதனை சாவடிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்க முடியாமல் அவதி. மலைச்சாலை போக்குவரத்தை சரி செய்வதற்காக இரண்டு ஜேசிபிகளுடன் காவல்துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்துள்ளனர். மேலும் பல இடங்களில் ஆங்காங்கே நீரூற்றுகள் உருவாகி சாலையில் மண் மற்றும் பாறைகள் கிடைப்பதால் போக்குவரத்து சரி செய்வதற்கு காலதாமதம் ஆகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story