வத்தல்மலை செல்லும் சாலையில் மண் சரிவு

வத்தல்மலை செல்லும் சாலையில் தொடர் கன மழையால், கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தல்மலையில் சின்னாங்காடு, ஒன்றியங்காடு, பால் சிலம்பு, பெரியூர், நாயக்கனூர் உள்ளிட்ட ஏழு மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வத்தல்மலை அடிவாரத்தில் இருந்து, மலைக்கு செல்ல,13 கிலோமீட்டர் தொலைவுக்கு, 24 கொண்டை ஊசி வளைவுகளுடன் தார்ச்சாலை உள்ளது. மழைக்காலத்தில் சாலையில் மண் சரிவு ஏற் படுவதால், வேன், ஜீப் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டது. இந் நிலையில், 2022 முதல் பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்டபட்டது.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், வத்தல்மலையின், 4, 8, 9, 18வது கொண்டை ஊசி வளைவுகளில், நேற்று மண் சரிவு ஏற்பட்டது. சில இடங்களில் பெரிய பாறைகள் சாலையோரம் உருண்டு விழுந்தது. இதனால் பெரிய அளவில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.இருப்பினும் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மேலும் அன்று தடுக்க முடியும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story