திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

X
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர்
வெள்ளக்கோவிலில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருப்பூர் தெற்கு மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதி வெள்ளகோவில் நகரத்தில் மாணவரணி சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட பேச்சாளர்கள் மாநிலக் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், கழக பேச்சாளர் குமரி பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் மாவட்ட கழக செயலாளர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் இல. பத்மநாபன் , மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
