மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

பொதுகூட்டம்

சங்ககிரியில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திமுக சேலம் மேற்கு மாவட்ட மாணவரணி மற்றும் சங்ககிரி நகர திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் சங்ககிரி புதிய எடப்பாடி சால நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி தலைமையில் மாணவரணி அமைப்பாளர் கண்ணன் வரவேற்றார். சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, ஒன்றியச் செயலாளர் கே.எம்.ராஜேஷ், நகர செயலாளர் கமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொது செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் தமிழ்மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டனர். திமுக ஆட்சிகாலத்தில் தான் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள், ஏழை எளிய மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அருந்ததியர் இன மக்களுக்கு உள் இடஒதுக்கீடு அளித்ததன் பேரில் இன்று பல பேர் தமிழகத்தின் அரசு துறையில் உயரதிகாரிகளாக உள்ளனர். அதே போல் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிருக்கு விலையில்லா இலவச பேருந்து சேவை, மகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளித்து சேவையாற்றி வருகிறார் என்வும் மேலும் அவர் வரும் மக்களவை தேர்தலில் பொதுமக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அப்போது தலைமை கழக பேச்சாளர்கள் நெய்வேலி தங்கம், வெங்கட்ராம மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் சரவணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர்நிர்மலா, மாவட்ட விவசாய அணி தலைவர் ராஜவேலு, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வராஜா, நகர பொருளாளர் பி.செல்வராஜ உட்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story