மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் - எம்.எல்.ஏ அழைப்பு

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் - எம்.எல்.ஏ  அழைப்பு

எம்.எல்.ஏ செல்வராஜ் 

பல்லடத்தில் நடக்கும் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், செல்வராஜ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தி திணிப்புக்கு எதிராக, தாய்மொழியாம் தமிழை காத்திடும் போரில் தம் இன்னுயிர் ஈந்து தாய்மொழி காத்த தியாகிகளின் ஈகத்தை, தியாகத்தை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நாம் விரும்பாத ஒரு மொழியை எதிர்த்துப் போரிட்டு, ஐயகோ நம்மிடம் இல்லாது மறைந்துபோன நடராசனின் வீரவாழ்வை, நாங்களும் பின்பற்றுவோம் என்று உறுதிகொள்வீர்களா? என்ற பேரறிஞர் அண்ணா வின் கூற்றின் படி, தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க, கழகத்தின் மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆண்டு தோறும் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நம் திருப்பூர் வடக்கு மாவட்டத்தில், இன்று (வியாழக்கிழமை) திருப்பூர் மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் எனது (செல்வராஜ் எம்.எல்.ஏ.) தலைமையில் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

திருப்பூரில் இடுவம்பாளையம், அருள்மிகு காமாட்சியம்மன் கோவில் திடலில் நடைபெறுகிற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கழக சட்டதிட்ட திருத்தக்குழு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் இரா.கிரிராஜனும், திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் திராவிட மணியும், பல்லடம் நகரத்தில் நடைபெறுகிற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள் ஜோன்ஸ் ரூசோ, போர்முரசு கதிரவன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். எனவே மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், இந்நாள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மற்றும் கழக மூத்த முன்னோடிகள், அனைவரும் எழுச்சியோடு பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story