காங்கேயம் மருத்துவமனையில் லேப்ரோஸ்கோபிக்  சிகிச்சை 

காங்கேயம் மருத்துவமனையில் லேப்ரோஸ்கோபிக்   சிகிச்சை 

சிகிச்சைக்கு வந்தவர்கள்

காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக லேப்ரோஸ்கோபிக் சிகிச்சை செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் இயங்கி வரும் காங்கேயம் அரசு மருத்துவமனை தமிழக அரசினால் தலைமை மருத்துவமனைமாக தரம் உயர்த்தியுள்ளது. தினசரி அளவில் சுமார் 500 உள் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். காது மூக்கு தொண்டை,

பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மற்றும் மகப்பேறு மருத்துவம் போன்ற பலவித சிகிச்சை அளித்து வரும் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று முதல் முறையாக தலைமை மருத்துவர் சந்திரசேகர் தலைமையில் லேப்ராஸ்கோபிக் எனப்படும் அறுவை சிகிச்சை ஒட்டுக்குடல் அகற்ற வெற்றிகரமாக செய்யப்பட்டது.

இந்த சிகிச்சை நிபுணர் மருத்துவர் அருண்பாபு, மயக்கவியல் மருத்துவர் தியாகராஜன் மற்றும் செவிலியர் உமா ஆகியோர் உடன் இருந்து நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ உபகரணங்களை கொண்டு சுமார் 27 வயதுடைய பெண்ணிற்கு ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சையை அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ. 75 ஆயிரம் சலுகையில்,

செய்து முடித்துள்ளனர். வரும் நாட்களில் பொதுமக்களுக்காக இது போன்ற அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படும் எனவும் காங்கேயம் அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story