காங்கேயத்தில் லாரிமோதி தொழிலாளி பலி
பலியான தொழிலாளி
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதிக்குட்பட்ட திருப்பூர் சாலை காந்திநகரில் வசித்து வருபவர் வெங்கடாசலம் என்கிற வெங்கிடு வயது 55. இவர் காங்கேயத்தில் ஒரு கம்பெனியில் சாக்கு தைக்கும் கூலித் தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் காங்கேயம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவுண்டானா பகுதி அருகில் மெடிக்கலில் மாத்திரை வாங்குவதற்காக தனது மொபட்டில் வந்துள்ளார்.
வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்று போது காங்கயம் அரசு மருத்துவமனை வளாகம் அருகில் தனியார் நிறுவன லாரியின் முன்பக்க சக்கரத்தில் மோதி கீழே விழந்து பின்னர் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து படுகாயம் அடைந்த அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு காங்கயம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கேயம் போலிசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.