கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் லேசர் மின்விளக்கு வசதி

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் லேசர் மின்விளக்கு வசதி 3 கோடி ரூபாய் செலவில் அமைகிறது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுவு மண்டபத்தின் அருவில் உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டுள்ளது. இந்த சிலை நிறுவப்பட்டு தற்போது 24 ஆண்டுகள் ஆகிறது. மேலும் இந்த சிலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் சிலையை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பராமரித்து வருகிறது. திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்து நடத்தி வருகிறது. தற்போது 37 கோடி செலவில் திருவள்ளூர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே கண்ணாடி கூண்டு இழையிலான இணைப்பு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பாலப் பணியால் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக திருவள்ளூர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை.
இரவிலும் கடற்கரையில் இருந்தவாறு சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய மின் விளக்கு வசதி போதுமானதாக இல்லாததால் இரவு நேரங்களில் திருவள்ளுவர் சிலை முழுமையாக ஒளிவளத்தில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற அடைந்து வந்தனர். இதை தொடர்ந்து தற்போது திருவள்ளுவர் சிலை இரவில் ஒளிவள்ளத்தில் மிளிர செய்வதற்காக ரூபாய் 3 கோடி செலவில் லேசர் மின் விளக்கு வசதி ஏற்படுத்த தமிழக சுற்றுலாத்துறை முடிவு செய்தது. அதன்படி இந்த லேசர் மின்விளக்கு வசதிக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
