ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யுங்கள் - மாவட்ட செயலாளர் வேண்டுகோள்

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யுங்கள் - மாவட்ட செயலாளர் வேண்டுகோள்

ஆலோசனை கூட்டம்

செய்யாறு நகர அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர அதிமுக சார்பாக தனியார் திருமண மண்டபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் - கூட்டம் நகர செயலாளர் கே.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பா ளர்களாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு வருகின்ற 24ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அதிமுக கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். அப்போது மாவட் டச் செயலாளர் தூசி கே. மோகன் கூறுகையில், 'மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் நிர்வாகிகள் அனைவரும் தங்களால் முடிந்த அளவிற்கு ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங் கிடுங்கள்' என்றார். முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணி யன் பேசுகையில், 'ஜெய லலிதா பிறந்த நாளினை ஏழை எளிய மக்களின் விழாவாக கொண்டாடு அதிமுக தொண்டர்களும் ஒருங்கிணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை தேடித்தர பாடுபட வேண்டும்' என்றார். ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ மகன் அன்பழகன், நகரவை தலைவர் ஏ.ஜனார்த்த னன், மாவட்ட நிர்வாகிகள் டி.பி.துரை, ஏ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், ஜி.கோபால், ஜி.கோவிந்த ராஜ், இ.வெங்கடேசன், அருளானந்தம், ஆர். கே.மெய்யப்பன், வி.முனுசாமி, எம்.பாஸ்கரன், அருண். இளையராஜா, பாபு, சுரேஷ்குமார், தணிகாசலம், பாலாஜி, சக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story