மறைந்த கம்யூ.தலைவர் என். சங்கரய்யா நினைவேந்தல் கூட்டம்

மறைந்த கம்யூ.தலைவர் என். சங்கரய்யா நினைவேந்தல் கூட்டம்

நினைவேந்தல் கூட்டம் 

விடுதலைப் போராட்ட வீரர்,கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர் மறைந்த எம். சங்கரய்யாவின் நினைவேந்தல் கூட்டம் சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் நடைபெற்றது. இந்திய விடுதலைப் போராட்ட பொதுவுடமை இயக்கத்தின் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தேசிய கவுன்சில் உறுப்பினரும், சுதந்திரம் கிடைத்தால் மட்டும் போதாது சமூக விடுதலை, பொருளாதார சுதந்திரம், சோஷலிசமே இறுதித் தீர்வு என்கிற கருத்தினை முன்வைத்து கட்சியை வளர்த்த மிக முக்கியமான தலைவரும், எட்டு ஆண்டு சிறை தண்டனை மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை என வாழ்ந்து சாதி மறுப்பு திருமணம் செய்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், கட்சியின் மாநில செயலாளராகவும், விவசாய சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் இருந்து கட்சியை வழி நடத்திய எம். சங்கரய்யா தமிழக அரசால் தகைசால் தமிழர் விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட முதல் மனிதர் ஆவார்.அவரதுமறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நினைவேந்தல் கூட்டம் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது.

Tags

Next Story