பெருமாநல்லூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

பெருமாநல்லூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

ஜெயலலிதா பிறந்தநாள் விழா

பெருமாநல்லூரில் மறைந்த முன்னாள் முதல் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே. என். விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம்,பெருமாநல்லூர் நால்ரோடு அருகில் மறைந்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.பின்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிழ்ச்சியில் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணிசிவசாமி,மாவட்ட கவுன்சிலர்வேல்குமார்சாமிநாதன்,ஒன்றிய கவுன்சிலர் மகத்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்

Tags

Next Story