வீராண குப்பம் பகுதியில் தாமதமாக நடைபெற்ற வாக்குப்பதிவு

வீராண குப்பம் பகுதியில் தாமதமாக நடைபெற்ற வாக்குப்பதிவு

அதிமுக பிரமுகர் பெயர் நீக்கம்

வீராண குப்பம் பகுதியில் வாக்காளர் பெயர் பட்டியல் இருந்து அதிமுக பிரமுகர் பெயர் நீக்கம் செய்யப்பட்டதால் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

வீராண குப்பம் பகுதியில் வாக்காளர் பெயர் பட்டியல் இருந்து அதிமுக பிரமுகர் பெயர் நீக்கம் தாமதமாக நடைபெற்ற வாக்குப்பதிவு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீராணகுப்பம் பகுதியில் அதிமுக கிளை செயலாளர் அண்ணாதுரை என்பவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறி,

பாராளுமன்றத் தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் வாக்களிக்க சென்றவருக்கு அதிமுக கிளை செயலாளர் தேர்தல் நடத்தும் அதிகாரி தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறியதை அடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது அங்கு இருந்த காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.

இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்கு பதிவு தாமதமானது இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெயர் நீக்கம் செய்ததற்கான காரணம் பி எல் ஓ அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு அறிவுரை கூறியதை அடுத்து பி எல் ஓ அலுவலர் சத்யா என்பவரிடம் வீரனகுப்பம் அதிமுக கிளை செயலாளர் அண்ணாதுரை கேட்டபொழுது அவர் அலட்சியமாக பதில் கூறியதாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது அவர் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கவுன்சிலர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட தேர்தல்களில் தான் வேட்பாளராக போட்டியிட்டதாகவும் தற்போது தனக்கு 50 வயது கடந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து வகையான தேர்தல்களிலும் வாக்களித்து வருவதாகவும்,

இன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பெயர் பட்டியலிலேயே தனது பெயர் இல்லை என்று ஆதங்கத்தை தெரிவித்தார் மேலும் இது ஆளும் கட்சியினை சேர்ந்தவர்களின் சதி என்றும் என்னைப்போன்ற பிரமுகர்களுக்கு இது போன்ற அவள நிலை ஏற்படும் பட்சத்தில் சாதாரண மக்களுக்கு என்ன நிலைமை ஏற்படும் என்றும் வேதனை தெரிவித்தார்

Tags

Next Story