கருங்கலில் லேட்டக்ஸ் கணிணியியல் பயிலரங்கம்

கருங்கலில் லேட்டக்ஸ் கணிணியியல் பயிலரங்கம்
கல்லுரியில் பயிலரங்கம்
கருங்கலில் லேட்டக்ஸ் கணிணியியல் பயிலரங்கம் நடைபெற்றது.

குமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக ஒரு நாள் லேட்டக்ஸ் கணினியியல் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்பணியாளர் ஆன்றனி ஜோஸ் துவக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் அருட்பணியாளர் முனைவர் மைக்கேல் ஆரோக்கியசாமி தலைமை உரையாற்றினார்.

கல்லூரி ஆன்மீக வழிகாட்டி அருட்பணியாளர் அஜின் ஜோஸ், துணை முதல்வர் முனைவர் ஆர். சிவனேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராகப் புனித அல்போன்சா கல்லூரி கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் சனல் கலந்து கொண்டு நவீன கணினி அறிவியல் குறித்தும், அதன் தேவை,

முக்கியத்துவம் குறித்துப் பயிற்சியளித்தார். இது கோட்பாடுகள் மற்றும் கணினி ஆய்வக பயிற்சிகள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story