ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்ட பணி துவக்கம்

ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்ட பணி துவக்கம்
X

ஆய்ஷ்மான் மருத்துவ திட்ட கணக்கெடுப்பு 

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் முதல் கட்ட கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவின் பேரில், மாவட்ட துணை இயக்குநர் சுகாதார பணிகள் பாலுசாமி ஆலோசனை படி, வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன் தலைமையில்,ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் முதல் கட்ட கணக்கெடுப்பு துவங்கியது.

இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகை கவர்னர் சோலை குந்தகோடு மந்து, ( தோடர் ) பழங்குடியினர் வசிக்கும் வீடுகளுக்கு சென்று சுகாதாரத்துறை ஊழியர்கள், கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். கணக்கெடுப்பு பணியில் கவர்னர் சோலை கிராம சுகாதார செவிலியர் ஜாக்லின் செல்வ குமாரி, பாரதி, மற்றும் ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story