புதிய வழித்தட பேருந்து சேவை துவக்கம்
பேருந்து சேவை துவக்கம்
பொன்னமராவதி - புதுக்கோட்டை இடையே புதிய வழித்தட பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், பொன்னமராவதி புதுக்கோட்டை புதிய வழித்தட பேருந்து சேவையினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் இரா.இளங்கோவன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Next Story