தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது - ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்
சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடைபெற்ற தா.ம.க நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது அதிக திட்டங்களை கொடுத்து வாழ்க்கை தரம் உயர்வதற்கு நமது சுதந்திரத்திற்கு பிறகு மத்தியில் ஆளும் நரேந்திர மோடி ஆட்சி முதலிடத்தில் இருப்பது என்பது மாற்றுக்கருத்து கிடையாது. இருப்பினும் புள்ளி விவரத்தை பிரதமர் எடுத்துக்கூறும் போது அதை திரித்து மகளிருக்கு எதிராக முதல்வர் எடுத்துப் பேசுவது அவர் வகிக்கும் பொறுப்பிற்கு அழகல்ல . மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்து இருப்பது எடுத்துக்காட்டு 20 நாட்களான பிறகும் வழக்கினுடைய குற்றநிலை என்ன என்பது தெரிந்து கொள்ள பொதுமக்கள் இருக்கிறார்கள்.
காவல்துறை காலக்கெடுவுக்குள் உண்மை நிலையை உணர்த்துவார்கள் என்று நம்புகிறேன். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக நம்புகிறேன் வடமாநிலங்களில் அதிக இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உள்ளதாகவும், அதனால் பாஜக கூட்டணிக்கு வெற்றிக்கு பிரகாசமாக இருப்பதாக உள்ளது
. ஏரி, குளங்கள் முறையாக தூர்வாரி நீர்நிலைகளில் மழை நீரை தேக்கி வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும் டெல்டா பகுதிகளில் போதிய அளவில் மழை பெய்யவில்லை கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரைக் கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டணி அரசுக்காக அவர்கள் சுனக்கம் காட்டி வருகிறார்கள் என விவசாயிகள் உடைய எண்ணமாக இருந்து வருவதாக கருதுகிறேன். என்றார்.