கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக சட்டத்துறை அமைச்சர் வாக்கு சேகரிப்பு

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக சட்டத்துறை அமைச்சர் வாக்கு சேகரிப்பு

சட்டத்துறை அமைச்சர் வாக்கு சேகரிப்பு

நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் க்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

நாகை மாவட்டம் தலைஞாயிறு (கீழையூர் மேற்கு) ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் கொளப்பாடு, பனங்னாடி, நால்ரோடு, கச்சனநகரம், கொத்தங்குடி உள்ளிட்ட கிராமங்களில் கிராமம் கிராமமாக சென்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகத்தலைவர் கௌதமன் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகைமாலி, கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் மலர்வண்ணன், தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் மகாகுமார்,ஆகியோருடன் சென்று வாக்கு சேகரித்தார்.

நால்ரோட்டில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வாக்கு சேகரித்து பேசுகையில், பா.ஜ.க. இரண்டு தினங்களுக்கு முன் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அதில் நாங்கள் அதை செய்போம், இதை செய்வோம் என்று ஒரு கம்சா ரீல் விட்டுள்ளனர். 10 ஆண்டுகாலம் மோடி நாட்டை ஆண்டார். 2014 ஆம் ஆண்டு பொய் சொல்லி ஆட்சிக்கு மோடி வந்தார். 2019 ஆண்டு அந்த பொய்யை தக்க வைத்துள்ளார். இப்ப அந்த பொய்யெல்லாம் வெலுத்து போச்சு என்பதால் 2024க்கு புது பொய்யை மோடி சொல்லியுள்ளார். மோடியின் வாக்குறுதி என்பது புதிய பொய்யாகும். ஆட்சியில் இருக்குபோது செய்யாத மோடி இனி ஆட்சிக்கு வந்தால் செய்ய போகிறாராம்.

இப்போது புதிதாக திட்டங்களை செய்ய முடியாத திட்டங்களை மக்களை ஏமாற்றும் வகையில் அறிவித்துள்ளார்கள். ரூ. 15 லட்சம் போடுவதாக சொன்னார்கள், 6 சிலிண்டர் தருவதாக சொன்னார்கள். உழவர்களுக்கு மானியம் தறுவதாக சொன்னார்கள். இப்படி மக்களை ஏமாற்றும் திட்டங்களை சொன்ன மோடியின் வாக்குறுதிகளை இனி மக்கள் நம்ப மாட்டார்கள். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்ற கழகம் எல்லாம் சேர்ந்து அமைத்த கூட்டணி உருவாக்கப்பட்டதுதான் விவசாய நேரம் போக மீத நேரத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்பது நம்முடைய குழந்தை, அந்த குழந்தையை மோடி ஊட்டி வளர்ப்பாரா, மாட்டார், அதை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து வருகிறார். இப்போது நிதியை ஒதுக்காமல் வேலை நாட்களை குறைத்து விட்டார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்பட்டு ரூ. 400 சம்பளம் உயர்த்தப்படும். தி.மு.க. சொல்ல முடிந்ததை செய்வோம், செய்ய முடிந்ததை செய்வோம் அதைதான் செய்வோம். இன்னும் 2 ஆண்டுகாலம் ஆட்சி உள்ளது. 5 ஆண்டுகாலம் முதல் ஆட்சியை தந்துள்ளார்கள். தொர்ந்து தளபதியின் ஆட்சிதான். மாற்று சக்தி கிடையாது. தேர்தலுக்கு பின் அண்ணாமாலையும் பா.ஜ.க.வும் காணமால் போகும். இன்று ஆட்சியில் இருப்பதால் தமிழ்நாட்டில் பா.ஜ.க. உள்ளது. இந்தியாவில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் பா.ஜ.க காணாமல் போகும். அதிமுக துண்டு, துண்டாக போகும்.

கூட்டணி சோராமல் விட்டு தொண்டர்களை நடு ரோட்டில் விட்டு விட்டாய் என தொண்டர்கள் தடுமாறி கொண்டுள்ளார்கள். அந்த தொண்டர்கள் முடிவு எடுத்து விட்டார்கள். எடப்பாடியை தூக்கி எரிந்து விட்டு தி.மு.க. தலைமையில் ஏற்க வேண்டும் என்றுள்ளனர். உங்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க கூடிய தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதிஸ்டாலின். உழைக்கும் தலைவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வை.செல்வராஜ்க்கு அனைவரும் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு சட்டத்துறைஅமைச்சர் எஸ்.ரகுபதிபேசினார்.

Tags

Next Story