சொத்து தகராறில் வக்கீலுக்கு வெட்டு - 2 பேர் கைது !

சொத்து தகராறில் வக்கீலுக்கு வெட்டு -  2 பேர் கைது !
கைது
சொத்து தகராறில் வக்கீலை தாக்கிய இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து இருவரை போலிசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் கைலாசம். இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். மேலும் அகஸ்தீஸ்வரம் பேரூர் அதிமுக செயலாளர் ஆகவும் இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஐயங்கண் (72) என்பவருக்கும் சொத்து பிரச்சனை சம்பந்தமாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த வழக்கில் சமீபத்தில் வக்கீல் கைலாசத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதனால் கைலாசம் மீது அய்யன்கண் கடும் கோபத்திலிருந்து உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட இடத்தை அளவு செய்வதற்காக நீதிமன்றத்தில் இருந்து ஆமினா மற்றும் வக்கீல் கைலாசம் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த துரைப்பாண்டியன் (62) மற்றும் அவரது மனைவி சாந்தா (55) அய்யன்கண் மற்றும் அவரது மனைவி வனஜா (62)இவர்கள் மகன் செந்தில் அரசு ஆகியோர் கையில் ஆயுதங்களுடன் அங்கு சென்றனர். நிலத்தை அளந்து கொண்டிருந்த கைலாசத்துடன் வாக்குவாதம் செய்தனர். இதை அடுத்து துரைப்பாண்டியன், அய்யன்கண் மற்றும் செந்தில் அரசு சேர்ந்து திடீரென கைலாசத்தை அரிவாளால் வெட்டினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த கைலாசம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவுசெய்து துரை பாண்டியன் மற்றும் அய்யன்கண் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் தலை மறைவானவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags

Next Story