சட்டத்தின் பெயர்களை மாற்றியதை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்!

சட்டத்தின் பெயர்களை மாற்றியதை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்!

புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் எட்டாம் தேதி வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.


புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் எட்டாம் தேதி வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் IPC, Cr PC, IEA ஆகிய மூன்று சட்டங்களை புதிதாக வடமொழியில் BNS- பாரதிய நியாய ஷன்ஹிதா,BNSS- பாரதிய நஹ்ரிக் சுரஷா, BS- பாரதிய சஷய அதினயம் என மாற்றப்பட்டுள்ளதை கண்டித்து தமிழ்நாடு புதுச்சேரியில் கூட்டமைப்பின் சார்பில் இன்று முதல் எட்டாம் தேதி வரை நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தேசமயம் உண்ணாவிரதப் போராட்டம்,ஆர்ப்பாட்டம் ஆகியன முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் இன்று உண்ணாவிரத போராட்டமானது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இது குறித்து பேசிய கூட்டுக்குழுவின் நிர்வாகிகள் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் முன்பு இருந்தது போலவே ஆங்கிலத்தில் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.மேலும் இது காவல்துறைக்கு சாதகமாக அமைவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story