புதிய சட்டத்திருத்ததை எதிர்த்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆண்டிபட்டி நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை எதிர்த்தும் , அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் ஆண்டிப்பட்டியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது. ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் உள்ள 60 வழக்கறிஞர்களும் ஒட்டுமொத்தமாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன மேலும் பல்வேறு வழக்குகளுக்காக வந்தவர்கள் நீதிமன்றம் நடைபெறாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தால் ஆண்டிபட்டி நீதிமன்ற வளாகம் வெறுச்சோடி காணப்பட்டது

Tags

Next Story