பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பு

பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பு

நீதிமன்றம்

பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க அவசர கூட்டம், தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் ஜனவரி 5ம் தேதி மாலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய அரசாங்கம் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் பெயர்களை இந்தி மொழியில் மாற்றி மக்களுக்கு எதிராக பல சட்ட திருத்தங்களை செய்து நாடாளுமன்றத்தில் ' மசோதா நிறைவேற்றி உள்ளதால், அந்த மசோதாக்களை வாபஸ் பெற வலியறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க ஜனவரி 6ம் தேதி சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் சங்க உறுப்பினர்கள் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி ஜனவரி 6ஆம் தேதி சனிக்கிழமை பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கத்தின், வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story