வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
இ-ஃபைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இ-ஃபைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
E-Filing முறையை நிறுத்தி வைக்க வலியுறுத்தி நீதிமன்ற பணி புறக்கணிப்பில் பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகக் குழுவின் அவசர கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் ஏப்ரல் 4ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கீழமை நீதிமன்றங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளின்படியும், சங்க உறுப்பினர்களின் வேண்டுகோளின்படியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து விசாரனை நீதிமன்றங்களுக்கும் E-Filing முறை கொண்டுவர அனைத்து உபகரணங்களுடன், கட்டமைப்பு வசதிகளையும், பயிற்ச்சி பெற்ற ஊழியர்களை கொண்டு E-Filing மையங்கள் அமைக்கப்பட வேண்டு மென்றும் அதுவரை கட்டாய E-Filing முறையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைக்க வலியுறுத்தி வருகின்ற, ஏப்ரல் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமையும் ஏப்ரல் ஆறாம் தேதி சனிக்கிழமையும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்ற பணிகளிலிருந்து சங்க உறுப்பினர்கள் விலகி இருப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அதன் அடிப்படையின்,ஏப்ரல் ஐந்தாம் தேதி சங்கத்தின் வழக்கறிஞர்கள் கோரிக்கை வலியுறுத்தி நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story