வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம்

வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம்

வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டித்தர கோரி, வக்கீல் சங்கத்தினர் காலவரையற்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அரசினர் தோட்ட வாளகத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைந்துள்ளது, இந்த கட்டிடம் கட்டி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிய நிலையில், மழை காலங்களில், இந்த நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள அரசு ஆவணங்கள் சேதமடைவதாகவும், மேலும் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றம் வளாகம் சி.எல் சாலையில் உள்ள வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால், அங்கு வாகனங்கள் நிறுத்தக்கூட இடம் இல்லையெனவும், மேலும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், வணிகவரி அலுவலகத்தில் செயல்பட்டு வருவதாகவும், மேலும் நீதிமன்ற நீபதிகளுக்கான குடியிருப்புகளும் அமைக்கப்படவில்லையெனவும், மேலும் நீதிமன்றங்கள் ஆங்காங்கே அமைந்துள்ளதால், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களும், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கடும் சிரமத்திற்க்குள்ளாகி வருகின்றனர்.

வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டி தர வேண்டி வாணியம்பாடி வழக்கறிஞர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டித்தர கோரி வாணியம்பாடி வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Tags

Next Story