ஸ்ரீவில்லிபுத்தூரில் வக்கீல் குமாஸ்தா குத்தி கொலை: குற்றவாளி கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் வக்கீல் குமாஸ்தா குத்தி கொலை: குற்றவாளி கைது
போலீசார் பேச்சுவார்த்தை
ஸ்ரீவில்லிபுத்தூரில் வக்கீல் குமாஸ்தா குத்தி கொலை செய்த குற்றவாளி தப்பி ஓடிய நிலையில் 17 நாட்கள் கழித்து கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவை சேர்ந்தவர் வக்கீல் குமாஸ்தா மாரிமுத்து வயது 45. இவருக்கு வாய் பேச முடியாத மனைவி தெய்வானை மற்றும் ஒரு சிறு வயது மகள் உள்ளனர். மாரிமுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்து வருகிறார்.

மாரிமுத்துவின் வாய் பேச முடியாத மனைவி தெய்வானை என்பவரை கொளூர்பட்டியை சேர்ந்த வினோத் வயது 30 என்பவர் அடிக்கடி தகாத வார்த்தைகளால் பேசியும் கையைப் பிடித்து இழுப்பதும் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதுமாக துன்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து மாரிமுத்து அவரது மனைவி தெய்வானை கடந்த 2023 ஆம் ஆண்டு நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வினோத் மீது வழக்கு பதிவு செய்து வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில்,

நிலுவையில் இருந்து வந்த நிலையில் கடந்த 03 ஆம் தேதி இரவு மாரிமுத்து தனது வீட்டிலிருந்து கைகாட்டி கோயில் பஜாருக்கு நடந்து வந்த போது ஐந்து கடை அருகே வினோத் என்பவர் தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாரிமுத்துவின் வயிற்றில் குத்திய நிலையில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே மாரிமுத்து உயிரிழந்தார். கொலையாளி வினோத் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.தகவல் அறிந்து வந்த நகர் காவல் துறையினர் மாரிமுத்துவின் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வினோத் என்பவர் மீது நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளியை தனிப்படைகள் அமைத்து கடந்த 17 நாட்களாக தேடி வந்த காவல்துறையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைப்பேட்டை அருகே குற்றவாளி வினோத் என்பவர் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்த நிலையில் அப்பகுதியை சுற்றி வளைய மிட்டு வினோதை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story