வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு

வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு

ஶ்ரீவில்லிபுத்தூரில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இன்று முதல் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஶ்ரீவில்லிபுத்தூரில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இன்று முதல் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு யாருடைய அனுமதியும் இல்லாமல் நிறைவேற்றியதை கண்டித்து வழக்கறிஞர்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்டத் திருத்தங்களால் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் பாதிக்கப்படும் வகையில் காவல் துறையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப் பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஶ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் வழக்கறிஞர்கள் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். நாளை சங்கத்தின் முன் ஆர்ப்பாட்டம், நாளை மறுநாள் மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் என மத்திய அரசு சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவான ஜாக் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story