நீதிமன்ற பணிகளை புறக்கணித்த வழக்கறிஞர்கள்
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று நாளையும் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று நாளையும் நீதிமன்ற பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழுவின் அவசர கூட்டம் சங்கத் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் நீதிமன்ற வளாக கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் சென்னை, சைதாப்பேட்டை, வழக்கறிஞர் கௌதமை மர்ம நபர்கள் கொடுரமாக கொலை செய்ததை இச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. குற்றவாளிகளை கைது செய்து உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல்துறையை வலியுறுத்தியும் , மற்றும் முப்பெரும் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹிந்தி, சமஸ்கிருத சட்ட திருத்தங்களை வாபஸ் பெற்று ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி முப்பெரும் சட்டங்களை மீண்டும் 01.07.2024 முதல் நடைமுறை படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும், பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் ஜூன் 14 வெள்ளிக்கிழமை, மற்றும் ஜூன் 15 சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்ற பணிகளிலிருந்து விலகி இருப்பதென கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது,
அதன்படி ஜூன் 14ஆம் தேதி இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீதிமன்ற பணிகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளன.