வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள முப்பெரும் சட்ட எதிா்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில் இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறையில் உள்ள 3 சட்டங்களுக்கு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆதீனியம் மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்து இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட முப்பெரும் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கிய நிலையில்., முப்பெரும் சட்டங்கள் குறித்து அந்தந்த மாநில அரசு மற்றும் நீதிமன்றங்களுக்கும் மற்றும் மாநில காவல்துறைக்கும் முறையாக அறிவிப்பாணை அனுப்பியுள்ளது. இந்நிலையில் நாடுமுழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்கத்தினர் மத்திய அரசின் முப்பெரும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் இன்று முதல் ஜூலை 8-தேதி முதல் தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர்..
அதன்படி மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசின் புதிய முப்பெரும் சட்டங்களின் பெயர் திருத்தங்களை செய்ததை உடனே நிறுத்தி வைக்க வலியுறுத்தி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் முப்பெரும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வழக்கம் போல் தங்களது பணிக்கு செல்வதாக கூறி சில வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக 3 சட்ட திருத்த பெயர் மாற்றத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆதரவு, எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி வாக்குவாதம் செய்தனர். அப்போது இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கலைந்துசென்ற நிலையில் மீண்டும் வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய நிலையில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. முப்பெரும் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் இருதரப்பு வழக்கறிஞர்களும் வாக்குவாதம் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதால் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஏராளமான காவல் துறையினர் குவித்து வைக்கப்பட்டுள்ளனர்