புதிய குற்றவியல் சட்ட அமலை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களும் கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதே மாதத்தில் அந்த சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டங்களுக்கு மாற்றாக மேற்கண்ட மூன்று புதிய சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் இந்த மூன்று புதிய சட்டங்களும் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளன. இதனைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பாக, தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் பொதுச்செயலாளர் பி. காமராஜ், அவர்கள் தலைமையில், ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் எம். வாசுதேவன், ராசிபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் சதீஷ்குமார், மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் துணை செயலாளர் ஆர்.கே.டி. தங்கதுரை,என். செல்வகுமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.